Latestமலேசியா

மலேசியாவின் நிதி பிரச்னைகள்; சீனா அனுதாபம் காட்டும்! – மகாதீர்

பெய்ஜிங், ஆக.20- மலேசியா எதிர்நோக்கியுள்ள நிதி பிரச்சனைகள் குறித்த விவரங்கள் சீன நாட்டுப் பிரதமர் லீ கெ குய்ங்கிடம் விவரிக்கப் பட்டுள்ளதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இன்று தெரிவித்தார்.

“எனவே மலேசியா எதிர்கொண்டுள்ள நிதிப் பிரச்னைகளை சீனா புரிந்து கொண்டு மலேசியாவிடம் அனுதாபம் காட்டும் என்று நான் நம்புகிறேன்” என்று லீ கெ குய்ங்குடனான அதிகாரப் பூர்வ கலந்துரையாடலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மகாதீர் கூறினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் ஆட்சியின் கீழ் சீனாவுடனான முதலீட்டு ஒப்பந்தங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த விவரங்களை, மகாதீரோ அல்லது லீ கெ குய்ங்கோ பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்துக் கொள்ளவில்லை.

இருந்த போதிலும், மலேசியாவுடனான பொருளாதார உறவை சீனா இனிமேற்கொண்டு மேலும் வலுப்படுத்தும் என்று லீ அறிவித்தார்.

மலேசியாவில் பல பில்லியன் மதிப்பிலான சீனா முதலீட்டு திட்டங்கள் குறித்த மறு பரிசீலனைகளை சீன அரசாங்கம் ஏற்றுக் கொள்ளக் கூடும் என்பது இதன் வாயிலாக தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமல்லாது, பெய்ஜிங் மற்றும் புத்ராஜெயாவுடனான உறவை வலுப்படுத்துவதோடு, மலேசிய இறக்குமதி எண்ணிக்கையை அதிகரிக்கவும் சீனா ஒப்புக் கொண்டுள்ளது என்று லீ கூறினார்.

சீனா நாட்டிற்கு மலேசியா பெரும் ஆதரவை வழங்குவதாகவும், மலேசியாவில் சீனா தொடர்ந்து முதலீடு செய்வதை அரசாங்கம் வரவேற்கும் என்றும் மகாதீர் தெரிவித்துக் கொண்டார்.

இவ்விரு நாடுகளும் ஒற்றுமையாக செயல்பட்டால், அவற்றின் வர்த்தக உறவுகள் வலுவடையும் என்பதில் தமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.   தென்கிழக்கு ஆசியாவில் சீனாவின் தொழில்நுட்ப தேவைகளை உருவாக்க சிறந்த மையமாக மலேசியா செயல்படும் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker