Latestமலேசியா

மலேசியாவுடன் உறவு மேலும் வலுவடையும்! -சிங்கை நம்பிக்கை

சிங்கப்பூர், ஆகஸ்ட். 20- மலேசியாவின் புதிய அரசு நிர்வாகத்துடன் மிக அணுக்கமாக பணிபுரிவதன் மூலம் இருவழி உறவுகளை மேலும் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியன் லூங் நம்பிக்கை தெரிவித்தார்.

”பிரதமர் மகாதீர் மற்றும் அவரது குழுவுடன் நமது ஆழமான பங்காளித்துவத்தை மேலும் கட்டியெழுப்ப முடியும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நாம் இணைந்தே மேலும் முன்னேற்றத்தை நோக்கி நகர்வோம்” என்று சிங்கப்பூரின் தேசிய தின உரையில் பிரதமர் லீ ஹிசியன் லூங் தெரிவித்தார்.

முதலில் பகாசா மலேசியாவிலும் பின்னர் மண்ட்ரின் மற்றும் ஆங்கிலத்திலும் அவர் தம்முடைய உரையை நிகழ்த்தினார்.

மலேசியாவுடனான அடிப்படை உறவுகளில் மாற்றம் இல்லை. இரத்த பந்தத்தாலும் வரலாற்று ரீதியாகவும் புவியியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாம் ஒருவரோடு ஒருவர் பின்னி பிணைக்கப்பட்டவர்கள். பொதுவான சவால்களை எதிர்கொள்ள நாம் நெருக்கமாக செயல்பட வேண்டியுள்ளது என்று பிரதமர் லீ சொன்னார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker