Latestஉலகம்

அழிவின் விளிம்பில் உலக நாடுகள்! சுனாமி அபாயம்

நியூயார்க், ஆகஸ்ட்.21- இன்னும் சில ஆண்டுகளில் உலகின் பல நாடுகளின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவின் வெர்ஜீனியா தொழில் நுட்ப நிறுவனத்தின் நிபுணர்கள் குழு மேற்கண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதன்படி தென் சீனக்கடல் பகுதியின் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் தொடங்கி உலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் ஏற்படவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது சிறிதளவு உயர்ந்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் சுனாமி தாக்குதல் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பருவநிலை மாற்றம் காரணமாக கடல் நீர் தற்போது சிறிதளவு உயர்ந்துள்ளது. குறிப்பாக தெற்கு சீனாவில் மகாயூ கடலில் 1.5 அடி முதல் 3 அடி வரை கடல் நீர் உயர்ந்துள்ளது.

மேலும் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் அங்கு 8.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. அதன் காரணமாக சுனாமி ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. அப்படி சுனாமி ஏற்பட்டால் தென் சீனக் கடல் பகுதியில் மணிலாவில் தொடங்கி தெற்கு தைவான் வழியாக உலகம் ழுமுவம் சுனாமி தாக்கும் அபாயம் ஏற்படுமென எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker