Latestமலேசியா

அழுகையை நிறுத்தாததால் குழந்தையை வதைப்பதா?

கெப்பாலா பாத்தாஸ், ஆகஸ்ட்.21- அழுகையை நிறுத்தாததால் 10 மாத ஆண் குழந்தையை கிள்ளி பதம் பார்த்த 33 வயது பெண்ணை போலீசார் இன்று கைது செய்தனர். கைதான பெண் அக்குழந்தையின் பராமரித்து வந்தவர் ஆவார்.

தாமான் ஶ்ரீ செர்டாங்கில் இச்சம்பவம் நிகழ்ந்தது. இன்று காலை 7-க்கு அக்குழந்தையை அதன் பெற்றொர் சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டில் விட்டிருக்கின்றனர். வந்தது முதல் குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த பெண் குழந்தையைக் கிள்ளி கிள்ளி சித்ரவதை செய்திருக்கிறார்.

அதை அந்த பெண்ணின் 4 வயது மகன் நேரில் பார்த்திருக்கிறார். கிள்ளிய இடமெல்லாம் இரத்தம் கட்டியது போல தழும்புகள் ஏற்பட பயத்தில் காலை 10 அளவில் அந்த பெண் குழந்தையின் தாயாருக்கு வாட்செப்பில் தகவல் சொல்லியிருக்கிறார். உடனடியாக விரைந்து வந்த குழந்தையின் தாயார் குழந்தையை கெப்பாலா பாத்தாஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.

குழந்தையின் உடம்பில் இருந்த காயங்கள் சித்ரவதை செய்யப்பட்டதால் ஏற்பட்டிருப்பவை என மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதும் சம்பந்தப்பட்ட பெண் உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

குழந்தைக்கு உள் காயம் ஏதுமில்லை. எனினும், குழந்தையை கிள்ளி காயம் ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker