Latestமலேசியா

இன ரீதி அரசியல் கட்சிகள் ஏற்புடையதே! -டத்தோ சிவராஜ்

கோலாலம்பூர், ஆக.21- நாட்டுப் பற்றின் அடிப்படையில் நடத்தப்படும் இனம் சார்ந்த அரசியலை ஏற்றுக் கொள்வதில் எவ்வித தப்பும் இல்லை என்று மஇகா இளைஞர் பிரிவின் தலைவர் டத்தோ சி.சிவராஜ் கூறினார்.

அடுத்து வரும் பொதுத் தேர்தல்களில் கூட, இன அடிப்படையில் அரசியல் நடத்தும் கட்சிகள் தொடர்ந்து போட்டியிடும் என்று அவர் அவ்வாறு சொன்னார். அதன் அடிப்படையில், மஇகா மீண்டும் துளிர்த்தெழுந்து, அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பும் அதிகமாக இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“மஇகாவால் இனிமேற்கொண்டு வெற்றிப் பாதையில் நடைப் போடவே முடியாது என்பது போல் சிலர் கருத்துரைத்து வருகின்றனர். கடந்த பொதுத் தேர்தலில், மஇகா ஏன் தோல்வியை தழுவியது என்பதை உணர்ந்து, அதனைச் சரி செய்து, மீண்டும் சிறப்பிக்க மஇகாவால் நிச்சயமாக முடியும்” என்றார் அவர்.

“இன்றைய இளைஞர்கள் இன அடிப்படையில் நடத்தப் படும் கட்சிகள் மற்றும் அரசியலை வெறுத்து ஒதுக்குகின்றனர் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், சித்தரிக்கப் படுவதைப் போன்று இன அரசியல் அவ்வளவு மோசமானது அல்ல” என்று சிவராஜ் சொன்னார்.

பிரிபூமி பெர்சாத்து மற்றும் ஜசெக ஆகிய கட்சிகள் கடந்த பொதுத் தேர்தலில் பல தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றியை கண்டன. அக்கட்சிகளும் இன அடிப்படையில் தான் நடத்தப் படுகின்றன என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

அடுத்த பொதுத் தேர்தலில் இனங்களைச் சார்ந்து போட்டியிடும் கட்சிகள் நிச்சயமாக வெற்றியை அடையும் என்பதை தான் நம்புவதாக அவர் தெரிவித்தார். இருந்த போதிலும், எந்தக் கட்சியை சார்ந்திருந்தாலும், நியாயமாகவும், நடுத்தர வகையில் நடத்தப் படும் அரசியலை தாம் மலேசிய மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சிவராஜ் அறிவுறுத்தினார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker