Latestமலேசியா

சாலை விபத்தில் போலீஸ் அதிகாரி பலி

ஜொகூர் பாரு, ஆகஸ்ட்.21- பெர்மாஸ் ஜெயா, ஜாலான் பந்தாயில் லோரியும் மோட்டார்சைக்கிளும் உட்படுத்திய விபத்தொன்றில் லான்ஸ் காப்ரல் பதவி வகிக்கும் ஆர்.கண்ணா என்ற போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்.

அவ்விபத்து நேற்று மாலை 3.15 மணியளவில் நிகழ்ந்தது. பெர்மாஸ் ஜெயாவில் இருந்து நகர் நோக்கி வந்து கொண்டிருந்த கண்ணாவை, அதே சாலையில் வந்த லோரி ஒன்று மோதித் தள்ளியது.

32 வயதான கண்ணாவுக்கு தலைப்பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.

அவர் பெர்மாஸ் ஜெயா போலீஸ் நிலையத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker