Latestமலேசியா

தீயில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு தருவதாக சொன்ன பிபிஆர் வீடுகள் எங்கே?

கோலாலம்பூர், ஆகஸ்ட்.21- கடந்த மே மாதம் தீ விபத்தொன்றில் வீடுகளை இழந்த மூன்று குடும்பத்தாருக்கு பிபிஆர் வீடு தருவதாக பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ வான் அஸிஸாவும், பண்டான் இண்டா சட்டமன்ற உறுப்பினர் இஸாம் ஹஷிமும் அளித்த வாக்குறுதி என்னவானது என மலேசிய மக்கள் புகார் மையத்தின் தலைவர் ஏ.சந்திரக்குமணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மே 30-ஆம் தேதி பண்டான் ஜெயாவில் நிகழ்ந்த தீ விபத்தில் மூன்று வீடுகள் தீக்கிரையாகின. சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று சந்தித்த வான் அஸிஸாவும், இஸாம் ஹஷிமும் அவர்களுக்கு புடுவிலுள்ள லக்சாமானா பிபிஆர் குடியிருப்பில் வீடு தருவதாக உறுதி அளித்திருந்தனர். எனினும், சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் இன்னும் பொது மண்டபம் ஒன்றில்தான் தங்கியுள்ளதாகவும் அவர்களுக்கு தருவதாக கூறியிருந்த வீடும் தரப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் கோலாலம்பூர் மாநகர்மன்றத் தரப்பினரிடம் கேட்டால் அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருப்பதாக மட்டும் பதிலளிப்பதாகவும் சரியான பதில் ஏதும் இல்லையெனவும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஜி.சந்திரன் என்பவர் தம்மிடம் கூறியதாக சந்திரக்குமணன் தெரிவித்தார்.

அக்குடும்பத்தார் தங்கியிருக்கும் பொது மண்டபம் தங்குவதற்கு சுகாதாரமற்ற சூழலில் இருப்பதாக சாடிய சந்திரக்குமணன், அரசாங்கம் இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வைக் காண வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker