Latestமலேசியா

பாலியல் குற்றவாளிகளின் விவரம்; தானியங்கி முறையில் பதிவு!

கோலாலம்பூர், ஆக.21- பாலியல் குற்றங்களை புரியும் குற்றவாளிகளின் விவரங்களை, மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் அதிகாரப்பூர்வ பதிவேட்டில் பதிவது மேலும் விரிவாக்கப்படும் என்று துணையமைச்சர் ஹன்னா இயோ கூறினார்.

குழந்தைகள் பதிவகத்தின் கீழ், தானியங்கி செயல் முறை வாயிலாக உடனடியாக அக்குற்றவாளிகளின் விவரங்கள் பதிவுச் செய்யப் படும். அதற்கு வழி வகுக்கும் வகையில், குழந்தைகள் சட்டங்களில் மாற்றங்கள் செய்யப் படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில், பாலியல் குற்றங்களைச் புரிவோர் குறித்த விவரங்களை அறிந்துக் கொள்வதற்காக பள்ளிக்கூடங்கள் மற்றும் சிறார் காப்பகங்கள், மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்ப்பாட்டு அமைச்சின் உதவியை நாடுவதாக ஹன்னா இயோ கூறினார்.

“அந்தக் கோரிக்கைகளைப் பெற்றுக் கொள்ளும் அமைச்சு, காவல் துறை அல்லது நீதிமன்றங்களின் உதவியை நாடுகிறது. இதனால், நேர விரயம் ஏற்படுகிறது.
அதனால் தான், குழந்தைகள் சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு, பாலியல் வன்முறையில் ஈடுபடுவோரின் விவரங்களை தானியங்கி செயல் முறை வாயிலாக குழந்தைகள் பதிவகத்தில் பதிவுச் செய்ய நாங்கள் முயற்சித்து வருகிறோம்” என்று அவர் நாடாளுமன்றத்தில் விளக்கினார்.

நீதித் துறை மற்றும் காவல் துறையிடமிருந்து பெறப்பட்ட 300 குற்றவாளிகளின் விவரங்கள் தற்போது அவ்வமைச்சின் பதிவேட்டில் அதிகாரிகள் வாயிலாக பதிவு செய்யப் பட்டுள்ளதாகம் அவர்சொன்னார்.

இதனிடையில், கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, 1,483 குழந்தை பராமரிப்பாளர்கள், குழந்தைகளுக்கு பாலியல் கொடுமைகளை இழைத்துள்ளனர் என்ற தகவலையும் அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

“கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, 29 குழந்தைகள் சிறார் காப்பகங்களில் மரணமடைந்து உள்ளனர் என்று நலன்புரி இலாகாவிடம் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவற்றில் 13 காப்பகங்கள் அதிகாரப் பூர்வமாக பதிவு செய்யப் பட்டுள்ளன. 16 காப்பகங்கள் பதிவு செய்யப் படவில்லை” என்று அவர் சுட்டிக் காட்டினார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker