
வார்சா, ஆகஸ்ட். 21- இரண்டு வயது குழந்தையை துணி துவைக்கும் இயந்திரமான ‘வாஷிங்’ மிஷினுக்குள் அடைத்து வைத்ததால் அந்த குழந்தையை கதவை திறக்கும் படி கண்ணீர் விட்டு கதறிழுத வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலந்தைச் சேர்ந்தவர் ஷனிட்டா (வயது 21) என்பவரும் அவரின் கணவரும் ராடோம் என்ற இடத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இந்தக் குழந்தையை பராமரிப்பாளர் ஒருவரின் கண்காணிபில் விட்டு விட்டு வேளைக்குச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் இந்தத் குழந்தையை பார்த்துக் கொள்ளும் நபர், வாஷிங் மிஷினுள் அடைத்து வைத்து துன்பப் படுத்தியுள்ளார். இதில் அந்தக் குழந்தை கதவை திறக்கும்படி வாஷிங் மிஷின் கண்ணாடியில் கையை அழுதவண்ணம் இருந்தது.
இது தொடர்பான காட்சி இணையத்தில் வைரலானதால், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளர். அப்போது இந்த வீடியோவை பதிவேற்றம் செய்த மெத்தியூசஸ் என்ற (19 வயது) இளைஞரை போலிசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் குழந்தைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.