Latestஇந்தியா

தொற்று நோய்கள்- விஷப் பாம்புகள் படையெடுப்பு! கேரள மக்கள் அவதி!

திருவனந்தபுரம்,ஆகஸ்ட் 22- கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரைத் தொடர்ந்து தொற்று நோய்கள் மற்றும் விஷப் பாம்புகளின் படையெடுப்பால் மக்களின் இயல்பு  வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்.பட்டிருக்கிது.

அவ்வகையில் தற்போது வெள்ள நீர் வடிந்தோடிய பின் மக்கள் அவர்களின் இயல்பு நிலை வாழ்க்கையை தொடங்குவதற்கு தத்தம் குடியிருப்புகளை சுத்தம் செய்து வருகின்றனர்.

எனினும், பாதிப்புக்குள்ளான மக்களின் வீடுகளில் பாம்புகள் படையெடுத்து அங்குள்ள மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை  ஏற்படுத்தி வருகின்றன்.

குழந்தைகளை வைத்துக் கொண்டு குடியிருப்புகளை சுத்தம் செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில்,  இவ்வாறு விஷப் பாம்புகள் வீடுகளுக்குள் படையெடுப்பதால் மக்கள்
பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர்.

மேலும், தொற்று நோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்து வருவது கேரள மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker