Latestஉலகம்

வடகொரிய அதிபர் கிம் ஜோங்கை மீண்டும் சந்திப்பேன்! -அதிபர் டிரம்ப்

வாஷிங்டன், ஆகஸ்ட்.22- ”வடகொரிய அதிபர் கிம் ஜோங் யுன்னை மீண்டும் சந்திப்பேன்” என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரிய தலைவர் கிம்மை, சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி நடந்த உச்சி மாநாட்டில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்து பேசினார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்திப்பின் போது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் இல்லாத பிரதேசமாக மாற்ற உறுதி கொண்டு வடகொரியா அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்நிலையில் டிரம்ப்  செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியின் போது அவர் கூறியதாவது:

வடகொரிய தலைவர் கிம் அணு ஆயுதங்கள் கைவிடுவாரா, மாட்டாரா? என்பதில் பரவலாக சந்தேகங்கள் இருந்தாலும் கூட அவர் சொன்னபடி அணு ஆணுதங்களை கைவிடும் வகையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்து உள்ளார்.

இந்த விஷயத்தில் முன்பு போல சீனா உதவிகள் செய்யவில்லை. அமெரிக்காவுடன் சீனாவுக்கு உள்ள வர்த்தக பிரச்சினைதான் இதற்கு காரணமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

வடகொரியா அணு ஆயுதங்களை சோதிப்பதை தடுத்து நிறுத்தி விட்டேன். அவர்கள் ஏவுகணைகளை சோதித்துப் பார்த்ததையும் நிறுத்தி உள்ளேன். ஜப்பான் இதைக் கண்டு சிலிர்த்துப்போனது. இனி என்ன நடக்கப் போகிறது? யாருக்குத் தெரியும் நாங்கள் பார்க்கப் போகிறோம் என்றார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker