Latestஉலகம்

உடலில் 1616 ஊசிகள்- 3 முறை கருச்சிதைவு துயரத்தை எதிர்கொண்ட தம்பதியர்!

லண்டன். ஆகஸ்ட். 23- ஒரு குழந்தையை சுற்றிலும் இதய வடிவிலான ஊசிகள் இருப்பதை போன்ற புகைப்படம் சமீப காலமாகவே இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

ஒரு தம்பதியினருக்கு குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏதேனும் ஏற்பட்டால் கருமுட்டையையும் உயிரணுவையும் செயர்கையாக இணைத்து பின் சில நாட்கள் கழித்து அதனை பெண்ணின் கருப்பையில் ஊசிகள் மூலம் ஏற்றுவார்கள். இந்த முறைக்கு ஐ.வி.எஃப் என்று பெயர் உண்டு.

இந்த முறையை பயன்படுத்துவதற்கு கொஞ்சம் செலவாகும். ஆனால், முதல் முறையில் இந்த முயற்சி வெற்றியடையும் என்பதும் பெருத்த சந்தேகமே.
இம்முறையில் ஒரு பெண்ணுக்கு 4 தடவை மட்டுமே பயன்படுத்த முடியும். அதற்கு மேல் போனால் பின் விளைவுகள் ஏற்படும்.ஆனால் இவற்றையெல்லாம் லண்டனை சேர்ந்த ஒரு தம்பதியினர் தவிடுபொடியாக்கி உள்ளனர்.

லண்டனைச் சேர்ந்த பெட்ரிஷா (வயது 30) கிம்பெரிலி (வயது 37) தம்பதியினருக்கு கடந்த 3 ஆம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் அதனை சுற்றிலும் 1,616 ஊசிகளை இதய வடிவில் அடுக்கி புகைப்படம் ஒன்றினை எடுத்து கடந்த 10 ஆம் தேதியன்று இணையத்தில் பதிவிட்டனர். பதிவிட்ட சில மணி நேரங்களில் பலராலும் பகிரப்பட்டது

திருமணத்திற்கு பின் நீண்ட நாட்களாக குழந்தையின்றி தவித்த இந்தத் தம்பதி, ஐ.வி.எஃப் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சி செய்தனர். தொடர்ந்து தோல்வியே ஏற்பட்டது. நான்கு ஆண்டுகளில் 1616 ஊசிகள் பெட்ரிஷா உடலில் குத்தப்பட்டன. 7 முறை மேற்கொண்ட முயற்சியில் 3 கருச்சிதைவுகள் நிகழ்த்துள்ளதாக தம்பதியினர் விளக்கினர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker