Latestஇந்தியா

காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு அனில் அம்பானி நோட்டிஸ்!

புதுடில்லி, ஆகஸ்ட். 23- காங்திரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சி தலைவர்களுக்கு இந்தியக் கோடீஸ்வரரும் ரிலையன்ஸ் அதிபருமான அனில் அம்பானி நோட்டிஸ் வழக்கறிஞர் அனுப்பி உள்ளார்.

பிரான்சிடமிருந்து போவிமானங்கள் வாங்குவது தொடர்பான ‘ரபேல்’ ஒப்பந்தம் பற்றிப் பேசுவதை நிறுத்தாவிட்டால் சட்டப்படியான நடவடிக்கைகளைச் சத்திக்க வேண்டியிருக்கும் என அதில் அவர் எச்சரித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் வகை போர் விமானங்களை வாங்க இந்திய ஒப்பந்தம் செய்துள்ளது. விமானத்தின் உதிரி பாகங்களைத் தயாரிக்கவும்- பழுது பார்க்கவும் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்நிறுவனம் 42 ஆயிரம் கோடி ரூபாய் ஆதாயம் அடையும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம் சாட்டினார். இக்கருத்தை மையமாக வைத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக தவறான தகவல்களை காங்கிரஸ் கட்சியினர் பேசி வருவதாக ராகுலுக்கு, ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானி அண்மையில் கடிதம் எழுதினார்.

இதற்கிடையே காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் செர்கில் உட்பட பல்வேறு தலைவர்கள் மற்றும் செய்தி தொடர்பாளர்களுக்கு அனில் அம்பானி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார் அதில் ரபேல் ஒப்பந்தம் குறித்து பேசுவதை நிறுத்தாவிட்டால் சட்டப்படியான நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker