Latestமலேசியா

துன் மகாதீர் கீழே விழுந்தாரா? படங்களை திருப்பிப் போட்டு இணையத்தில் புரளி!

கோலாலம்பூர், ஆகஸ்ட்.23- நேற்று தேசிய பள்ளியில் நடைபெற்ற தியாகத் திருநாள் தொழுகைக்கு வந்திருந்த பிரதமர் துன் மகாதீர் தொழுகை முடிந்து எழுந்திருக்கையில் கீழே தள்ளாடி விழுந்ததாக எழுந்துள்ள வதந்தியை புகைப்படக் கலைஞரும், இணையப் பதிவேட்டாளருமான மீனாக் ஜிங்கோ என்பவர் மறுத்துள்ளார். தான் பிடித்த படங்களை பொறுப்பற்ற சில தரப்பினர் திருப்பிப் போட்டு பிரதமர் கீழே விழுவதைப் போலவும், கீழே விழுந்தவரை பக்கத்திம் இருந்தவர்கள் தூக்கி விடுவது போலவும் சமூக ஊடகங்களில் காண்பித்திருக்கிறார்கள் என மீனாக் ஜிங்கோ தெளிவுப்படுத்தியுள்ளார்.

பேஸ்புக்கிலும், வாட்செப்பிலும் அந்த படங்கள் வைரலாக்கப்பட்டது துன் மகாதீர் உடல் நலம் குன்றி இருப்பதைப் போல காட்டத்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், துன் மகாதீர் நலமுடன் இருக்கிறார் என மீனாக் ஜிங்கோ தெரிவித்துள்ளார்.

உண்மையில், மீனாக் ஜிங்கோ பிடித்த படங்கள் பிரதமர் தொழுகை முடிந்து சுயமாக எழுந்திருக்கும் காட்சிகள் ஆகும். சீனாவுக்கு 5 நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்த பிரதமருக்கு ஓய்வே இல்லை. இப்படி ஓய்வில்லாமல் வேலை செய்யும் மனிதர் இந்த வயதான காலத்திலும் சுயமாக எல்லா காரியங்களையும் செய்கிறார் என்பதை காட்டும் நோக்கத்தில்தான் மீனாக் அந்த படங்களை வரிசையாகப் பிடித்து தனது இணைய பதிவேட்டில் பதிவேற்றம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மீனாக் பிடித்த அந்த படங்களின் உண்மையான வரிசையைப் பார்க்க அவரது இணைய பதிவேட்டை சென்று பாருங்கள். https://jinggofotopages.blogspot.com/2018/08/hanya-seorang-anggota-kabinet-bersama.html

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker