Latestமலேசியா

பினாங்கில் மாபெரும் வேட்டை: ரிம. 26 மில்லியன் போதைப்பொருள் சிக்கியது

ஜோர்ஜ் டவுன், ஆக.23- பினாங்குத் தீவின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டைகளின் ஒரு பகுதியாக ரிம.26 மில்லியன் மதிப்புக் கொண்ட 506 கிலோகிராம் எடைக் கொண்ட போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அச்சம்பவம் தொடர்பில், புக்கிட் அமான் மற்றும் பினாங்கு மாநில போலீசார், தாய்லாந்து போதைப் பொருள் நடவடிக்கை பிரிவு மற்றும் தாய்லாந்து போதைப் பொருள் கட்டுப் பாடு வாரியத்துடன் இணைந்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் நான்கு ஆடவர்களை கைது செய்துள்ளனர் என்று புக்கிட் அமான் என்.சி.ஐ.டி துணை இயக்குநர் டத்தோ காங் செஸ் சியாங் கூறினார்.

“506 கிலோகிராம் எடைக் கொண்ட மெத்தாபிட்டாமய்ன் ரக போதைப் பொருளை, 473 தேயிலை பைகளில் நாங்கள் கண்பிடித்தோம். மேலும் 13 தேயிலை பைகளில், 26,000 எக்ஸ்டஸி மாத்திரைகளும் கண்டெடுக்கப் பட்டன” என்று அவர் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது, 3 கார்கள், ரொக்கப் பணம், நகைகள், கைக்கடிகாரங்கள் போன்றவற்றையும் போலீசார் சோதனை நடவடிக்கையின் போது பறிமுதல் செய்துள்ளனர் என்று காங் செஸ் சொன்னார்.

“கைது செய்யப்பட்ட நால்வரின் மீதும், ஏற்கனவே பல்வேறான குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ள. அவர்களில் இருவர், போதைப் பொருளை உட்கொண்டிருந்தனர் என்பது சிறுநீர் சோதனை வாயிலாக தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும், 27-ஆம் தேதி வரை தடுப்பு காவலில் வைக்கப் படுவர்” என்று அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker