Latestஉலகம்

இந்த பாம்புக்கு வழி சொல்லுங்க… போலீஸ் நிலையம் வந்த பெண்!

லண்டன், ஆகஸ்ட் 24- இங்கிலாந்தில் நியூகாசல் காவல் நிலையத்திற்கு வந்த பார்சல் பெட்டியில் 6 ஆடி நீள பாம்பு இருந்ததால் போலீசார் அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இங்கிலாந்தின் நியூகாசல் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு பெண் ஒருவர் தன்னுடைய நண்பருடன் மிகப்பெரிய வடிவிலான பெட்டியினை கொண்டு வந்துள்ளார்.

அதில் ஆங்காங்கே ஏராளமான சிறிய துளைகளும் இடப்பட்டியிருந்தன. அதனைப் போலீஸ்காரர் ஒருவர் வாங்கி திறந்து பார்த்த பொழுது உள்ளே 6 அடி நீளத்தில் வெள்ளை நிறப் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

ஆரம்பத்தில் விஷமுள்ள பாம்பாக இருக்குமோ என நினைத்து போலிசார் அனைவரும் அங்கும் இங்கும் ஓட, அந்த இடமே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் அது விஷமில்லாத பாம்பு வகையைச் சேர்ந்தது என்பதை அறிந்த போலிசார் பெட்டியை கொண்டு வந்த பெண்ணிடம் பாம்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

டீன் பகுதியில் உள்ள தெருவில் மதிய உணவிற்காக நடந்து செல்லும் போது இந்தப் பாம்பை பார்த்தேன். எங்கு செல்வதென தெரியாமல் அது தவித்து கொண்டிருந்தது. உடனே அதனை எடுத்துக் கொண்டு போலீசாரிடம் ஒப்படைக்கலாம் என்று வந்தேன் என்றார் அந்தப் பெண்.

ஒரு பெட்டியில் எடுத்து போட்டு காற்று செல்வதற்காக பெட்டியில் ஓட்டை மட்டும் இட்டிருந்தேன் என்றும் அந்தப் பெண் போலிசாரிடம் தெரிவித்தார்ர்.

பின்னர் இது குறித்து போலிசார் அல்பினோ பாம்புகள் விஷமில்லாத வகையை சார்ந்ததால் அவற்றை பெரும்பாலோனர் வீட்டில் செல்லப் பிராணிகளை போல வளர்த்து வருகின்றனர். இதனை கட்டாயம் அப்பகுதியில் உள்ள யாரோ ஒருவர் தான் செல்லப் பிராணியாக வளர்த்திருக்க வேண்டும். இதன் உரிமையாளரை கண்டுப்பிடித்து நிச்சயம் ஒப்படைப்போம் என்றனர் போலீசார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker