Latestஉலகம்

‘என்னை நீக்கினால், அமெரிக்கா சீர்குலையும்!’ -டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், ஆகஸ்ட். 24- ‘என்னைப் பதவி நீக்கம் செய்தால் அமெரிக்கா பொருளாதாரமே சீர் குலையும்’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்திருக்கிறார்.

முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அதிர்ச்சியில் உள்ள அதிபர் டிரம்ப் தன்னைப் பதவியிலிருந்து நீக்கினால் அமெரிக்கா பொருளாதாரம் சீர்குலையும் என கூறியுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்ட போது ஆபாச பட நடிகை உள்பட 2 பெண்கள், டிரம்ப் மீது பாலியல் புகார் சுமத்தினர். அவர்களுக்கு டிரம்பின் வழக்கறிஞர் மைக்கேன் கோஹன் பணம் கொடுத்து வாயை அடைத்தாக புகார் எழுந்தது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் கோஹன் தான் குற்றம் செய்ததை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். டிரம்ப் கூறியதால் தான் அப்படிச் செய்ததாக அவர் தெரிவித்தார். தேர்தல் விதிமுறைகளை மீறிப் பணம் கொடுக்கப் பட்டுள்ளதால் டிரம்பைப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என அமெரிக்காவில் குரல் எழுந்துள்ளது.

இது மட்டுமில்லாமல் டிரம்பின் முன்னாள் உதவியாளர் பால்மான்போர்ட் வங்கி மோசடி வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தினால் அறிவிக்கப் பட்டுள்ளார். மேற்கண்ட சம்பவங்களில் டிரம்ப் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக பேட்டியளித்த டிரம்ப் தன்னை பதவியிலிருந்து நீக்கினால் அமெரிக்கா பொருளாதாரம் சீர்குலையும் என கூறியுள்ளார். எல்லா வேலைகளையும் சரியாக செய்யும் ஒருவரை எப்படி பதவியிலிருந்து நீக்க முடியும் என எனக்கு தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker