Latestமலேசியா

சீன ஒப்பந்தங்கள் ரத்து ஏன்? விசாரணை தேவை- நஜிப்

கோலாலம்பூர், ஆகஸ்ட், 24- கிழக்குக் கரை ரயில் திட்டம் மற்றும் இரு சபா எரிவாய் குழாய் நிர்மாணிப்புத் திட்டம் ஆகியவை பக்காத்தான் ஹராப்பான் அரசினால் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடத்த அரச விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் கோரிக்கை விடுத்துள்ளார்.

மலேசிய அரசாங்கத்தின் வற்புறுத்தலின் பேரில் சீனாவுக்கு வழங்கப்பட்ட இந்தக் குத்தகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே அது குறித்து காரணங்களை அறிந்து கொள்ள பொதுமக்களுக்கு உரிமை உண்டு என்று நஜிப் சொன்னார்.

தமக்கு எதிராகவும், தேசிய முன்னணி அரசுக்கு எதிராகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த குத்தகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.

இந்தத் திட்டங்கலில் தவறுகள் நடந்துள்ளதா? என்பதை கண்டறிய அரச விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று தம்முடைய முகநூலில் நஜிப் அறிவுறுத்தி உள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker