Latestமலேசியா

சாதனைக்கு ஊனம் தடையல்ல; ஒற்றைக் கையில் மோட்டார் சைக்கிள் பயணம்!

பினாங்கு,ஆகஸ்ட்.26- செப்டம்பர் 16-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள மலேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளியான ஏ.சந்தன தாஸ் என்பவர் ஒற்றைக் கையிலேயே 5,000 கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிள் ஓட்டி மலேசிய சாதனை புத்தகத்தில் பெயர் பதிக்க இலக்கு கொண்டுள்ளார்.

இடக்கை மட்டுமே உள்ள சந்தன தாஸ் பினாங்கிலிருந்து தாய்லாந்து, மியன்மார், சிங்கப்பூர் எல்லாம் கடந்து 14 நாட்களுக்கு சுமார் 5,922 கிலோ மீட்டர் வரை மோட்டார் சைக்கிளில் வலம் வரவிருக்கிறார்.

யமாஹா R25 தான் அவர் பயணம் மேற்கொள்ளவிருக்கும் மோட்டார் சைக்கிளாகும்.

மூன்றாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த விபத்தொன்றில் சந்தன தாஸ் தனது வலக்கையை இழந்தார். எனினும், வலக்கையை இல்லாததை அவர் ஒரு துயரமாகவே கருதியது இல்லையாம்.

சந்தன தாஸ், உலக கின்னஸ் சாதனை படைக்கவும் விண்ணப்பித்திருக்கிறார். மலேசிய தினத்திற்குள் அவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டால், சந்தன தாஸ் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் பெறுவார்.

இந்த பயணத்திற்கான செலவு பெட்ரோல், தங்குமிடம், விளம்பரம் ஆகியவை சேர்த்து 27,000 ரிங்கிட் ஆகும். அதில், மலேசிய சாதனை புத்தகத்திற்கான கட்டணம் 1,810 ரிங்கிட்டும், கின்னஸ் உலக சாதனை புத்தகத்திற்கான கட்டணம் 4,100 ரிங்கிட்டும் அடங்கும்.

இதுவரை சந்தன தாஸுக்கு நிதி ஆதரவை வழங்கியவர் பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் ஏ.குமரேசன் ஆவார்.

சந்தன சாமியின் மலேசிய சாதனை மட்டுமல்ல கின்னஸ் உலக சாதனை ஆசையும் நிறைவேற வாழ்த்துவோம்!

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker