Latestஇந்தியா

ஜாகிர் நாய்க் பற்றிய தகவல்களை வெளியிட இந்திய அரசு மறுப்பு!

புதுடில்லி, ஆகஸ்ட். 26- சமயப் போதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவது குறித்த விவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவிக்க வெளியுறவு அமைச்சகம் மறுத்துவிட்டது.

பயங்கரவாதம் மற்றும் பண மோசடி தொடர்பாக சமய போதகர் ஜாகிர் நாய்க் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து வெளிநாட்டில் இருந்த அவர் தாயகம் திரும்ப மறுத்து விட்டார். தற்போது அவர் மலேசியாவில் தங்கியுள்ளதாக நம்பப்படுகிறது

அவரை நாடு கடத்த வேண்டும் என மலேசியாவிடம் வெளியுறவு அமைச்சகம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் ஜாகிர் நாய்க் நாடு கடத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் இதற்கு மலேசியா அளித்த பதில் குறித்த விவரங்களை அளிக்கும்படி பிடிஜ செய்தி நிறுவனம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த மத்திய அரசாங்கம், , இந்தியா சார்பில் நாடு கடத்துவது தொடர்பாக 160 மனுக்கள் பல்வேறு வெளிநாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளன. இவை நிலுவையில் உள்ளன. ஆர்டிஐ சட்டம் பிரிவு 8(1) (a) (f) ( h) இன் கீழ் ஜாகிர் நாய்க் குறித்த விபரங்களை தாங்கள் வெளியிட முடியாது எனக் கூறியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker