Latestஇந்தியாஉலகம்

வாகனத்தில் பிரபாகரன் படம்; கேரளாவில் சீமான் கைது

கேரளா,ஆகஸ்ட்.26- இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி விட்டு தமிழகம் திரும்புகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை அம்மாநில போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

விடுதலைப் புலித் தலைவர் பிரபாகரனின் படம் வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்ததை காரணம் காட்டி கேரள பாஜக எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த கைது நடவடிக்கை நடந்தது என நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

வெள்ளத்தால் கேரளம் மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளது. 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், பல இடங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பலரும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில், பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் நோக்கத்தில் நிவாரணப் பொருட்களுடன் சீமான் தலைமையில் அவரது கட்சியினர் கேரள மாநிலம் கோட்டயம் சென்றனர்.

கோட்டயம் மாவட்டத்திலுள்ள சங்கனாசேரி முகாமிற்குச் சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கினார்கள். நிவாரணப் பொருட்கள் வழங்கிவிட்டு தமிழ்நாடு திரும்பும் வழியில் சீமான் கட்சியினரை தடுத்து நிறுத்திய கோட்டயம் போலீஸார் அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தினர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணைக்குப் பின் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker