Latestமலேசியாவிளையாட்டு

ஸ்குவாஷ்: பிறந்தநாளில் தங்கம் வென்றார் நிக்கோல் டேவிட்!

பாலேம்பாங், ஆகஸ்ட்.26- இந்தோனேசியாவில் சற்று முன் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிருக்கான ஒற்றையர் ஸ்குவாஷ் இறுதி ஆட்டத்தில், நமது ஸ்குவாஷ் தாரகை தங்கம் வென்றார். இன்று நிக்கோல் தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடும் வேளை இந்த வெற்றியால் அவர் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார்.

ஆசிய போட்டியில் மலேசியா பெற்ற இரண்டாவது தங்கம் இதுவாகும்.

கெலோரா பூங் கார்னோ ஸ்குவாஷ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் நிக்கோல் டேவிட்டும் வளர்ந்துவரும் நமது மற்றொரு ஸ்குவாஷ் தாரகை எஸ்.சிவசங்கரியும் சந்தித்தனர்.

11-13, 11-9, 5-11, 11-6, 11-8 என்ற புள்ளிகளில் நிக்கோல் சிவசங்கரியை வீழ்த்தினார். எனினும், சிவசங்கரியும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றே சொல்ல வேண்டும். வெள்ளிப்பதக்கத்தை வென்றாலும் தனக்கு முன்னோடியுடன் விளையாடியதில் சிவசங்கரி மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker