Latestவிளையாட்டு

செரீனாவின் சூப்பர் ஹீரோ உடை: சரியா, தப்பா? கோபத்தில் ரசிகர்கள்!

பாரிஸ், ஆகஸ்ட் 27- தமது முதல் குழந்தையின்பிரசவத்திற்குப் பின்னர், தனது உடலை கவ்விப் பிடிக்கும் இறுக்கமான உடையை அணிந்து விளையாட ஆர்வம் காட்டி வருகிறார் பிரபல அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்.

ஒரு ‘சூப்பர் ஹீரோ’ போன்ற உணர்வை அளிப்பதாக கூறி, அந்த உடையை, அவர் பிரசவத்திற்கு பின்னர், பிற பெண்களும் அணியவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.

ஆனால் பிரெஞ்சு டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவரான பெர்ணார்ட்’ டென்னிஸ் விளையாட்டு சீருடைக் கட்டுப்பாடுகளின்படி செரீனாவின் அந்த உடை அடுத்த ஆண்டு போட்டிகளின் போது தடை செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

அடுத்த ஆண்டு போட்டிகளின் போது உடைக் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் என்று தெரிவித்த அவர், சில நேரங்களில் நாம் எல்லை மீறிப் போய் விடுகிறோம் என்றும் கூறியிருந்தார். அதிலும் அவர் செரீனாவின் சீருடையை குறிவைத்தே அவ்வாறு கூறியிருந்தார்.

அந்த உடையை ஏற்றுக் கொள்ளமுடியாது. நாம் விளையாட்டையும் விளையாடும் இடத்தையும் மதிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

பெர்ணார்ட்டின் இக்கருத்து, சர்ச்சையை கிளப்பிய நிலையில் எதிர்ப்பு தெரிவித்து செரீனாவின் ரசிகர்கள் இணையத்தில் விமர்சனங்களை கொட்டத் தொடங்கி விட்டனர்.

செரீனாவின் நீண்ட கால அனுசரனை நிறுவனமான “நைக்” செரீனாவின் படம் ஒன்றை வெளியிட்டு, “அவரது உடையிலிருந்து நீங்கள் சூப்பர் ஹீரோவை வேண்டுமானால் அகற்றலாம். ஆனால் அவருடைய ‘சூப்பர் பவரை’ அகற்ற முடியாது” என்ற ஒரு செய்தியையுப் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் ஊடகத்துக்கு பேட்டியளித்த செரீனா, பிரெஞ்சு டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவர் பெர்ணார்ட் மிகவும் அருமையானவர். அவரிடம் பேசுவது எளிது. அதனால் நாங்கள் பேசி ஒரு நல்ல புரிதலுக்கு வரமுடியும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker