Latestசினிமா

நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் விடுதி இழுத்து மூடப்பட்டது!

மசினகுடி, ஆகஸ்ட் 27- நீலகிரியில் யானைகள் வழித் தடத்தை ஆக்கிரமைத்து கட்டப்பட்டிருந்த 11 விடுதிகள் இழுத்து மூடப்பட்டன. சீ இதில் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான ரிசோட்டும் ஒன்றாகும்.

ஊட்டி அருகே பல பகுதிகளில் யானைகள் நடமாடக்கூடிய பகுதிகள். யானைகளுக்கு  தொல்லை கொடுக்கும் வகையில் இங்குள்ள  நிலங்களில் வீடுகள் கட்ட அனுமதி பெற்று  கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இந்தக் கட்டிடங்கள் பெரும்பாலும் தங்கும் விடுதிகளாக செயல்பட்டு வருகின்றன.

இதனால் யானைகள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டு அவற்றின் இனப் பெருக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பின்னர் மேல் முறையீடாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு  தொடுக்கப்பட்டது.

இதனை விசாரித்த  நீதிபதிகள் 39 விடுதிகளில், அனுமதியின்றி கட்டப்பட்ட 27 விடுதிகளுக்கு 48 மணி நேரத்தில் ‘சீல்’ வைக்க வேண்டும் என்றும் மீதமுள்ள 12 விடுதிகளின் ஆவணங்களை சரி பார்த்து, அனுமதி இல்லையெனில் சீல் வைக்க வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர்  திவ்யாவுக்கு உத்தரவிட்டார்.  அதில் இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான மொனார்க் சப்பாரி பார்க்  விடுதியும் ஒன்றாகும்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker