Latestமலேசியா

நெகிரி பாணி ‘மலாய் மொழி’யில் சரளமாக பேசும் பிரான்ஸ் சிறுமி! -(VIDEO)

சிரம்பான், ஆக.27- நெகிரி செம்பிலான் மாநிலத்தின் வழக்கு மொழி மலாயில், பிரான்சு சிறுமி ஒருத்தி மிகவும் சரளமாக, நேர்த்தியாக பேசி, சமூக வலைத் தளங்களில் பிரபலமாகி இருக்கிறாள்.

Mintak maap yo..dari @jade.nur 😁

A post shared by My daily journal (@light.km) on

Video Source : Istagram

மலேசியாவைச் சேர்ந்த நூரஸிமா கரீம் (வயது 43) மற்றும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த நிக்கோலாஸ் மௌலீன் (வயது 48) ஆகியோரின் மூன்றாவது பிள்ளையான ஜேட் நூர் மௌலீன் என்ற அச்சிறுமி, ‘நெகிரி செம்பிலான்’ மொழியில் மிகவும் சரளமாக உரையாடுகிறார்.

தன் பிள்ளைகளை தாம் பாரிஸில் வளர்த்து வருகின்ற போதிலும், தமது தாய்மொழியை அவர்களுக்குத் கற்றுத் தர தாம் தவறியதில்லை என்று நூரஸிமா தெரிவித்தார்.

“என் அனைத்து குழந்தைகளும் ஆங்கிலத்திலும் பிரான்சு மொழியிலும் உரையாடுவார்கள். அதே வேளையில், அவர்கள் தங்களின் தாய்மொழியைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நான் அவர்களுக்கு மலாய் மொழியை போதித்து வருகிறேன்” என்று நூரஸிமா சொன்னார்.

“என் தந்தை நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவருடன் கைத்தொலைபேசியில் உரையாடும் போது, நான் ‘நெகிரி செம்பிலான்’ மொழியில் தான் உரையாடுவேன்.

“நான் பேசுவதை அடிக்கடி நேரில் காணும் ஜேட், என்னைப் போலவே ‘நெகிரி செம்பிலான்’ மொழியில் உரையாட கற்றுக் கொண்டாள்” என்று நூரஸிமா சொன்னார்.

தனது மகள் நெகிரி செம்பிலான் மொழியில் உரையாடும் வீடியோ பதிவு, சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப் படுகிறது என்பது குறித்து தாம் அறியவில்லை என்றும் அது குறித்து தமது தோழி தம்மிடம் தெரிவித்ததாக அவர் சொன்னார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker