Latestமலேசியா

பிகேஆர் தேர்தல்: ரபீஸி போட்டி செல்லுமா? –வான் அஸீஸா

கோலாலம்பூர், ஆக.27- பண்டான் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரபீஸி ரம்லி மீது இரு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ள வேளையில், அவர் பிகேஆர் கட்சித் தேர்தலில் போட்டியிடலாமா என்பது குறித்து அக்கட்சியின் தேர்தல் குழு முடிவு எடுக்கும் என்று பிகேஆர் தலைவர் டத்தோஶ்ரீ வான் அஸிஸா கூறினார்.

குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி இருக்கும் ஒருவர்,கட்சித் தேர்தலில் பங்கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று பிகேஆர் கட்சி விதிமுறைகள் கூறுவதாக தி சன் டேய்லி என்ற நாளிதழ் வெளியிட்டுள்ள தகவல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த போது, வான் அஸிஸா அவ்வாறு கூறினார்.

ரபீஸி கட்சித் தேர்தலில் போட்டியிட அக்கட்சி அனுமதி வழங்கினால், அக்கட்சி பதிவு நீக்கம் செய்யப்படக் கூடும் என்று அந்த நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

அக்கட்சியின் தற்போதைய துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அஸ்மீன் அலியை எதிர்த்து ரபீஸி கட்சித் தேர்தலில் அப்பதவிக்குப் போட்டியிட முடிவெடுத்துள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டில், அனுமதியின்றி, 1எம்டிபி விவகாரம் குறித்த அறிக்கைகளை வெளியிட்டதற்காக ரபீஸி மீது இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபனமாகி, ரபீஸிக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டன.

அதுமட்டுமல்லாது, தேசிய கால்நடை நிறுவனத்தின் வங்கி விவகாரங்களை வெளியிட்ட குற்றத்திற்காக அவருக்கு 30 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது. கட்சித் தேர்தலில் போட்டியிடஆர்.ஓ.எஸ் தமக்கு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளதாக ரபீஸி சிலரிடம் தெரிவித்துள்ளார் என்றும் அந்நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker