Latestமலேசியா

‘பிரிம்’ உதவி தொடர வேண்டும்! – பாஸ்

கோலாலம்பூர், ஆகஸ்ட். 27- பாரிசான் அரசாங்கத்தினால் அறிமுகப் படுத்தப்பட்ட மக்கள் உதவித் திட்டமான ‘பிரிம்’ திட்ட பாணியிலான நிதியுதவிகள் மூலம் பக்காத்தான் அரசாங்கம் ஏழை மக்களுக்கு உதவுவதை தொடர்ந்து மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் வலியுறுத்தினார்.

பிரிம் போன்ற உதவித் திட்டங்கள் திடிரென பாதியிலேயே கைவிடப்படக்கூடாது. அதற்குப் பதிலாக, மக்களின் வாழ்க்கைச் செலவினச் சுமையைக் குறைக்கும் வகையில் அது தொடர்வதற்கு வழி காணவேண்டும் என்றார் அவர்.

மக்களுக்கு உதவவேண்டும் என்ற கொள்கையைக் கடைபிடிப்பது தான் இதில் மிக முக்கியமான அம்சம். இந்தத் திட்டத்தில் சில சீரமைப்புகள் தேவைப்படுகிறது. அவை முறையாக திட்டமிட்டு மேற்கொள்ளப் படவேண்டும். மக்களிடையே நிலவும் வறுமைப் பிரச்னையை நாம் களைய வேண்டியுள்ளது. எனவே இந்த உதவித் திட்டத்தை உடனுக்குடன் நிறுத்திவிடக் கூடாது என்று ஹாடி அவாங் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker