Latestஉலகம்

மணமகளின் மண்டை உடைந்தது! திருமணத்தில் பரபரப்பு!

கொழும்பு. ஆகஸ்ட் 27- திருமணம் ஒன்றின் போது மணமக்கள் முன்னிலையில் திடீரென்று ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தால் மணமகள் அதிர்ச்சியில் மயங்கி விழுந்த சம்பவம் ஒன்று தென் இலங்கையில் இடம் பெற்றுள்ளது.

குருநாகல் மாவட்டம் ஹெட்டிப்பொலா என்ற இடத்தில் இச்சம்பவம் நடந்தது. பௌத்த மத முறைப்படி நடைபெற்ற இந்தத் திருமண வைபவத்திற்கு பின்னர் மணமக்கள் இருவரும் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மணமகன் காரிலிருந்து இறங்கி மணமகளின் கையைப்பிடித்து இறக்கிய போது திடீரென்று சீனப் பட்டாசுகள் வெடிக்கவிடப் பட்டன.

சிறுதும் எதிர்பாராத அதிர்ச்சியில் துள்ளிக் குதித்து அலறிய மணமகள் அப்படியே மயங்கி விழுந்தார். தலையை அலங்கரிந்திருந்த கனமான கொண்டை கழன்று விழுந்தது. அச்சம்பவத்தின் போது காரின் கதவு மணமகளின் தலையில் மோதியதில் மண்டை உடைந்தது. இதனையடுத்து அவ்விடத்தில் சற்று நேரம் பரபரப்பான நிலை காணப்பட்டாலும் பின்னர் மணமகள் மயக்கம் தெளிந்து எழுந்தார்.அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அண்மைக் காலங்களில் தென்னிலங்கையில் நடைபெறும் திருமணங்களின் போது சீனப் பட்டாசுகள் வெடிக்கப் பட்டு மணமக்களை வரவேற்கின்றன புதிய கலாசாரம் தலைவிரித்தாடத் தொடங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker