Latestமலேசியா

மீன் பிடிக்கச் சென்றவரின் கண்களில் சிக்கியது பிணம்!

கோலாலம்பூர், ஆக.27- கிள்ளான் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றவரின் கண்களில், மீன்களுக்குப் பதிலாக ஆடவர் ஒருவரின் பிணம் சிக்கியுள்ளது. தாமான் மேடான் பகுதியைச் சேர்ந்த முகமட் ரஸாலி (வயது 59) என்ற ஆடவர், தனது மூன்று பிள்ளைகளுடன், கிள்ளான் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றார்.

“எங்களின் தூண்டில்களை ஆற்றில் போட்டு விட்டு, மீன் சிக்கும் என்ற எண்ணத்தில் நாங்கள் காத்திருந்தோம். அப்போது, எங்கள் நால்வரின் தூண்டில்களில் ஒன்றில் மீன் சிக்கியது என்று எங்களுக்குத் தெரிய வந்தது என்று மௌகமட் ரஸாலி சொன்னார்.

“ஆற்றுக் கரையிலிருந்து கீழே இறங்கி அந்தத் தூண்டிலை விடுவிக்க நான் இறங்கிய போது, ஆற்றில் ஏதோ மிதந்துக் கொண்டிருப்பதைகண்டேன். முதலில் பொம்மை ஏதோ மிதந்துக் கொண்டிருக்கிறது என்று நான் கருதினேன். அருகில் சென்ற போது, அது பிணம் என்று அறிந்து நான் திடுக்கிட்டேன். பின்னர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தேன்” என்று முகமட் ரஸாலி தெரிவித்தார்.

கயிற்றால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், அந்த ஆடவரின் பிணம் கண்டெடுக்கப் பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா ஓசிபிடி துணை ஆணையர் முகமட் ஸானி கூறினார்.

“ஆற்றில் மிதந்துக் கொண்டிருந்த அந்தப் பிணத்தை, தீயணைப்பு வீரர்களின் உதவிக் கொண்டு நாங்கள் மீட்டோம். கொலைச் செய்யப்பட்டுள்ள அந்த ஆடவர், 30 வயதிலிருந்து 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்கலாம்.

“மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்னர் அவர் கொலைச் செய்யப்பட்டிருக்கக் கூடும். இவ்விவகாரம் குறித்த தகவல் அறிந்தவர்கள் உடனடியாக 03-20529999 என்ற எண்ணில் அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்புக் கொள்ளுங்கள்” என்று ஸானி கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker