Latestவிளையாட்டு

செப்பாக் தக்ராவ்: 24 ஆண்டுக்குப் பின் மலேசியக் குழுவுக்கு  தங்கம்!

பெலாம்பாங், ஆக.28- கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருந்த பின்னர், மலேசியாவின் செப்பாக் தக்ராவ் குழு, ஆகக் கடைசியாக இந்தோனிசியாவில் தற்போது நடந்துவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கத்தை வென்றது.

கடைசி முறையாக கடந்த 1994 ஆம் ஆண்டில் ஜப்பானின் ஹிரோசிமா நகரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தான் மலேசிய செப்பாக் தக்ராவ் குழு தங்கப் பதக்கத்தை வென்றது.

மலேசியாவின் புகழ்பெற்ற ஆட்டமான செப்பாக் தக்ராவ் போட்டியில், குழுக்களுக்கு இடையிலான இறுதியாட்டத்தில் இந்தோனிசியக் குழுவை 2-1இல் வீழ்த்தி, இன்று மலேசியா தங்கத்தைக் கைப்பற்றியது.

தொடர்ச்சியாக உள்நாட்டு ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் இந்தோனிசியா களமிறங்கியது என்ற போதிலும் தனது திறமையான போராட்டத்தின் முடிவில் இழந்த புகழை மீட்கும் வண்ணம் தங்கப் பதக்கத்தை வென்றது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker