Latestமலேசியா

தனியார் மருத்துவமனைகள் இனி வேண்டாம்- PSM மகஜர்- (video)

புத்ராஜெயா,ஆகஸ்ட்.29- நாட்டில் இனி தனியார் மருத்துவமனைகளை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படக் கூடாது. மாறாக, மக்கள் தொகை அதிகமுள்ள பகுதிகளில் புதிய பொது மருத்துவமனைகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மலேசிய சோசியலிஸ்ட் கட்சி(பி.எஸ்.எம்) மகஜர் ஒன்றை சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளது.

பிஎஸ்எம் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினரும் முன்னாள் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் மைக்கல் ஜெயக்குமார், அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் மு.சரஸ்வதி, பொதுச்செயலாளர் எஸ். அருள்செல்வன் உட்பட அக்கட்சி உறுப்பினர்கள் சிலரும் இன்று காலையில் சுகாதார அமைச்சரின் பிரதிநிதியிடம் மகஜரை சமர்பித்தனர்.

பிஎஸ்எம் அளித்த மகஜரில் பரிந்துரைக்கப்பட்டுள்ள 6 அம்சங்கள் பின்வருமாறு:-

1. இப்போதைக்கு தனியார் மருத்துவமனைகள் அமைக்க அனுமதி தரப்படக் கூடாது. ஏனெனில், தனியார் மருத்துவமனைகள் மக்களிடமிருந்து அதிக பணம் பறிக்கப்படுவதாக பி.எஸ்.எம் தெரிவித்துள்ளது.

2. பொது மருத்துவமனைகளில் நிலவும் இட நெருக்கடி பிரச்சனைக்கு தீர்வு காண மேலும் பொது மருத்துவமனைகளை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள பல பொது மருத்துவமனைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. மக்கள் தொகை அதிகரித்துவரும் நிலையில், புதிய மருத்துவமனைகள் கட்டப்பட வேண்டும் என பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

3. பொது மருத்துவமனைகளில் சில சிகிச்சைகளுக்காக விதிக்கப்படும் இணைக் கட்டணங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற கட்டணங்கள் விதிக்கப்படுவதால் மக்கள் சிகிச்சை பெற தயக்கம் காட்டுவதாக கூறப்பட்டுள்ளது.

4. அதிகரித்துவிட்ட TB எனப்படும் காச நோய் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இந்நோய் அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில் அதிகம் ஏற்படுகிறது. பொது மருத்துவமனைகளில் அந்நியத் தொழிலாளர்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் அதிகம் என்பதால் அவர்கள் சிகிச்சை பெற்றுக் கொள்வதில்லை. அதனால் அந்நோய் உள்நாட்டினருக்கும் பரவுவதாக பிஎஸ்எம் விவரித்துள்ளது.

5. அரசாங்க கிளினிக்குகளிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால், மேலும் கிளினிக்குகளை அமைத்து வேலை இல்லாமல் திண்டாடும் இளம் மருத்துவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

6. சுகாதாரத் துறைக்கு போதுமான நிதி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். நிதிப் பற்றாக்குறையின் காரணமாக மக்களுக்கு சுமை ஏற்படுத்தக் கூடாதென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Rombongan PSM menghantar syor-syor menambahbaikkan kesihatan awam kepada Kementerian Kesihatan. Kesihatan bukan perdagangan, AJK Pusat Dr. Jeyakumar Devaraj PSM memberi keterangan tentang masalah dan penyelesaian yang dicadangkan.#KesihatanHakAsasi#BangkitRakyat

Posted by Parti Sosialis Malaysia on Tuesday, 28 August 2018

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker