Latestமலேசியா

தவறை உணர்ந்து விட்டோம்; பெயர் மாற்றம் கண்டது ராஜ் வாழை இலை உணவகம்!

கோலாலம்பூர், ஆக.29- ராஜ் வாழை இலை உணவகத்தின் தொழிலாளர்கள் அசுத்தமான நீரைக் கொண்டு சாப்பாட்டு தட்டுகளை கழுவிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப் பட்டதைத் தொடர்ந்து, அந்த உணவகத்தின் லைசன்ஸ் பறிமுதல் செய்யப் பட்டது.

அச்சம்பவம் நிகழ்ந்து மூன்று மாதங்களுக்குப் பின்னர், ராஜ் உணவகம் ஆர்.பி.எல் வாழை இலைச் சாப்பாடு என்று பெயர் மாற்றம் கண்டு, மீண்டும் திறக்கப் படுகிறது.

தங்களின் தவறை தாங்கள் உணர்ந்து விட்டதாகவும், தங்களின் தவறை திருத்திக் கொள்ள தங்களுக்கு மீண்டும் வழங்கப் பட்டுள்ள இந்த வாய்ப்பை தாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவிருப்பதாக அந்த உணவகத்தின் நிர்வாகம் அறிக்கை ஒன்றின் வாயிலாக தெரிவித்துள்ளது.

“நடந்த தவறுகளுக்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். உணவகத்தில் வேலைகள் சரிவர நடைபெறுகிறதா என்பதை நாங்கள் கண்காணிக்க தவறி விட்டோம். அந்தச் சம்பவத்தை தொடர்ந்து, தேவையான அனைத்து மாற்றங்களையும் நாங்கள் நிகழ்த்தி உள்ளோம்.

“உணவகங்கள் பேண வேண்டிய சுத்தம் மற்றும் விதிமுறைகளை நாங்கள் கடைப் பிடிப்போம். ஆர்.பி.எல் உணவகத்தில் உணவு உண்ண வரும்  வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் சிறப்பான சேவையை வழங்குவோம்” என்று அந்த உணவகத்தின் இயக்குநர் முகமட் ரிஸால் அப்துல் ரஹ்மான் கூறினார்.

கோலாலம்பூர் மாநகராண்மை கழகம் மற்றும் சுகாதார அமைச்சின் பாதுகாப்பு பிரிவின் மிகவும் கடுமையான ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை தாங்கள் எதிர்கொண்டதாகவும், அதில் தாங்கள் ‘பாஸ்’ ஆகி விட்ட்தாகவும் ரிஸால் அப்துல் தெரிவித்துக் கொண்டார்.

அந்த உணவகத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. சமையல் கட்டு, உணவு மற்றும் பானங்கள் தயாரிக்கப் படும் இடம், கை கழுவும் மற்றும் தட்டுகள் கழுவப் படும் இடம் மற்றும் உணவு பரிமாறப் படும் இடங்கள் சீரமைப்பு கண்டுள்ளன.

அதுமட்டுமல்லாது, சுகாதார அமைச்சின் கீழ் பதிவு செய்யப் பட்டுள்ள பயிற்சியாளர் ஒருவர், உணவுகளை பரிமாறும், மற்றும் சுத்தத்தை பேணும் வழிகள் குறித்து தனது தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார் என்றும் ஆர்.பி.எல் உணவகத்தின் இயக்குநர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker