Latestமலேசியா

ரிம.49 மில்லியன் களவு; உளவுத் துறை முன்னாள் அதிகாரிக்கு தடுப்புக் காவல்!

புத்ராஜெயா, ஆக. 29- பொதுத் தேர்தலுக்கான நிதியில் முறைகேடு செய்ததாக நேற்று எம்.ஏ.சி.சி. எனப்படும் ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் வெளிவிவகார உளவுத்துறை அமைப்பின் தலைவரான டத்தோ ஹசானா அப்துல் ஹமிட், இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார்.

மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக அவரை தடுப்புக் காவலில் வைக்க எம்.ஏ.சி.சி., நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியது. 61 வயதுடைய ஹசானா, ‘லோக்-அப்’பில் அணியும் ஆரஞ்சு நிற உடையில் கை விலங்கிடப்பட்டு இரு எம்.ஏ.சி.சி. அதிகாரிகளால் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.

நேற்று எம்.ஏ.சி.சி. தலைமை அலுவலகத்தில் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், பிற்பகல் 4.15 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார். அரசாங்கத்திற்கு சொந்தமான 49 மில்லியன் ரிங்கிட் பணம் கையாடல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹசானா விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்தப் பணம் காணாமல் போனது தொடர்பில் கடந்த திங்கள் கிழமையன்று ஹசானாவின் கீழ் பணிபுரிந்த துணை இயக்குனரும் இதர 6 அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்.

 

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker