Latestமலேசியா

விபத்தில் இறந்த அமைச்சரின் 85 வயது தாயார் வழக்கு: சொத்தில் பங்கு கேட்கிறார்!

கோலாலம்பூர், ஆக.29- கடந்த 2015-ஆம் ஆண்டில் நிகழ்ந்த விமான விபத்தொன்றில் மரணமடைந்த முன்னாள் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரான டான்ஶ்ரீ ஜமாலுடின் ஜார்ஜீஸின் சொத்துக்களில் பங்கு கேட்டு வழக்குத் தொடுத்துள்ளார்.

டான்ஶ்ரீ ஜமாலுடினுக்கு சொந்தமான ரிம.2.082 பில்லியன் மதிப்புக் கொண்டசொத்துக்களில் பங்கு கேட்டு அவரின் தாயார் இந்த வழக்கு தொடுத்துள்ளார்.

ஜமாலுடினின் தாயாரான அமீனா அப்துல்லா (வயது 85), தமது வழக்கறிஞரின் நிறுவனத்தின் உதவியோடு, ஷாரியா நீதிமன்றத்தில் அவ்வழக்கை தொடுத்துள்ளார்.

அமீனாவின் விண்ணப்பம் இன்று கோலாலம்பூர் ஷாரியா நீதிமன்றத்தின் பதிவாளர் சித்தி ஜுலைஹா முகமட் மன்சோரின் முன்னிலையில் வாசிக்கப் பட்டது. அவ்வழக்கு செப்டம்பர் 13-ஆம் தேதியன்று விசாரணைக்கு வரும் என்று சித்தி ஜுலைஹா அறிவித்தார்.

2015-ஆம் ஆண்டில் மரணமடைந்த ஜமாலுடினிற்கு மனைவி, ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். ஜமாலுடினின் தந்தை கடந்த 2002-ஆம் ஆண்டு இறந்து விட்டார். ஜமாலுடினின் தாயார் தொடர்ந்துள்ள வழக்கு குறித்து, அவரின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளதாக வழக்கறிஞர் கமார் அய்நியா கூறினார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker