Latestமலேசியா

செப் 10 முதல் KTM ரயில் டிக்கெட்டுக்கு ரொக்கப் பணம் செலுத்த முடியாதா?

கோலாலம்பூர்,ஆகஸ்ட்.30- கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் KTM இலகு ரயில் சேவையைப் பயன்படுத்துவோர் செப்டம்பர் 10-ஆம் தேதியில் இருந்து ரொக்கக் கட்டணம் செலுத்தி இனி டிக்கெட்டுகள் வாங்க முடியாது. பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் திட்டம் இதுவாகும்.

எனினும், ரொக்கக் கட்டணம் இல்லாமல் வெறும் முன்கட்டண அட்டைகளைப் பயன்படுத்தும் முறை தொடக்க கட்டமாக பெரியவர்களுக்கும் மாணவர்களுக்கும் மட்டும் கட்டாயமாக்கப்படும் என KTM நிறுவன சேவைப் பிரிவின் தலைமை நிர்வாகி
முகமட் ஹைடர் யுசோப் தெரிவித்தார்.

மாறாக, 12 வயது வரைக்குமான சிறுவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இது கட்டாயமாக்கப்படவில்லை. அவர்கள், முகப்பிடங்களில் ரொக்கக் கட்டணம் செலுத்தி டிக்கெட்டுகள் வாங்கிக் கொள்ளலாம் என்றார் அவர்.

இன்று கேஎல் செண்டரலில் ‘KTM Komuter Go Cashless’ திட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இத்தகவல்களை வெளியிட்டார். இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை முன்னிட்டு, செப்டம்பர் 10-ஆம் தேதியில் இருந்து 16-ஆம் தேதி வரை முக்கிய KTM நிலையங்களில் 30,000 Komuter Link அட்டைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker