Latestமலேசியா

மெர்டேக்கா சதுக்கம்: சுற்றுலா வந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

கோலாலம்பூர்,ஆகஸ்ட்.30- மலேசியாவுக்குச் சுற்றுலா வந்துள்ள இந்திய சுற்றுப்பயணியான ஒரு வயதான பெண்ணின் சங்கிலியைப் பறித்த சம்பவம் நேற்று மெர்டேக்கா சதுக்கத்தில் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கும் நிலையில் நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயலாக இது கருதப்படுகிறது.

இந்தியாவில் இருந்து வந்திருந்த ஒரு குடும்பத்தினர் மெர்டேக்கா சதுக்கத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் இச்சம்பவம் நடந்திருக்கிறது.

எங்கிருந்தோ மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவன் அந்த குடும்பத்தைச் சேர்ந்த வயதான பெண்மணியின் கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்த அடுத்த கணமே தப்பிச் சென்றுவிட்டான். ஆனால், அந்த பெண்மணி கீழே விழுந்து அவரது தலையில் இரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெண்மணிக்கு ஏற்பட்ட காயத்துக்கு தையலும் போடப்பட்டிருக்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker