Latestவிளையாட்டு

உள்ளாடை தெரிந்ததால் தண்டனையா? டென்னிஸ் வீராங்கனைக்கு குவியும் ஆதரவு

வாஷிங்டன், ஆகஸ்ட், 31- விளையாடுமிடத்தில் சட்டையைக் கழற்றும் போது உள்ளாடை தெரிந்ததற்காக நடுவரால் தண்டிக்கப்பட்ட பிரான்ஸ் டென்னிஸ் வீராங்கனைக்கு உலகெங்கிலும் இருந்து ஆதரவு பெருகுகிறது

அமெரிக்கா பொது டென்னிஸ் விளையாட்டுப் போட்டி ஒன்றின் நடுவில் வெப்பம் அதிகமாக இருந்ததால் ஓய்வெடுக்கச் சென்ற பிரான்ஸ் வீராங்கனை அலிஷ் கோர்னட் மீண்டும் டென்னிஸ் திடலுக்கு திரும்பிய போது தற்செயலாக தனது சட்டையை மாற்றி போட்டியிருந்ததைக் கவனித்தார்.

உடனடியாக தனது ராக்கெட்டை கால்களுக்கு நடுவில் வைத்துக் கொண்டு தனது சட்டையைக் கழற்றி சரியாக அணிந்தார். வெறும் 10 விநாடிகளுக்கு இச்சம்பவம் நடந்து முடிந்து விட்டது. ஆனால் விளையாட்டின் நடுவரான கிரிஷ்டின் ரஸ்க், விளையாட்டு விதிகளை மீறிவிட்டதாக கூறி அலிஷ் கோர்னட் அவருக்கு அபராதம் விதிப்பதாக அறிவித்தார்.

பெண்கள் டென்னிஸ் கூட்டமைப்பின் விதிகளின்படி டென்னிஸ் ஆடுகளத்தில் போது பெண்கள் உடை மாற்றுவதற்கு அனுமதியில்லை. ஆனால், ஆண்கள் உடை மாற்ற தடையில்லை.

அலிஷுக்கு ஆதரவாகவும் அந்த நடுவருக்கு எதிராகவும்   உலகெங்கும் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. இச்சம்பவம் பெண்களுக்கு எதிரான செயலாக பார்க்கப்படுகிறது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker