Latestமலேசியா

ஓப்ஸ் 3.0 சோதனை: 500-க்கும் மேற்பட்ட அந்நியத் தொழிலாளர்கள் கைது

சிப்பாங், செப்.1-மலேசியாவின் 3+1 பொது மன்னிப்பு திட்டம் நேற்று நள்ளிரவோடு ஒரு நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து, நாட்டில் சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மாபெரும் தேடுதல் வேட்டையில் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் 5000-க்கும் அதிகமான அந்நியத் தொழிலாளர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர்களில் இப்போதைக்கு 500-க்கு மேற்பட்டவர்கள் கைதுள்ளதாகி உள்ளதாகவும் குடிநுழைவுத் துறையின் இயக்குநர் டத்தோஶ்ரீ முஸ்தாபார் அலி கூறினார்.

ஓப்ஸ் 3.0 என்ற குடிநுழைவுத் துறையின் இம்மாபெரும் சோதனை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ள நிலையில்,அந்நியத் தொழிலாளர்களை குறிப்பிட்ட வேலைகளில் சேர்ப்பதாக ஏமாற்றி அவர்களை நாட்டிற்கு அழைத்து வந்து பல்வேறான துறைகளில் சேர்த்துவிடும் ஏமாற்றுக் கும்பல்களும் தங்களிடம் வசமாக சிக்கவுள்ளதாக அவர் சொன்னார்.

தாங்களாகவே வந்து சரண் அடையுமாறு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதற்கு மேல் தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டோம் என்றும் பல முறை நினைவுறுத்தி விட்டோம். அதன் பிறகும் அதை பொருட்படுத்தாமல் இருக்கிறார்கள் என்றால் சம்பந்தப்பட்ட சட்டவிரோத தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியே இல்லை என  முஸ்தாபார் விவரித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker