Latestஉலகம்

சிறுமிகளை ஏமாற்றி ஆபாசப் படம் எடுக்க புதிய யுக்தி! கும்பல் கைது!

வாஷிங்டன், செப்.1- கனடா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சிறுமிகளை தந்திரமாக ஏமாற்றி ஆபாசபடம் எடுத்த ஏழு அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களை பயன்படுத்தும் சிறுமிகளைக் குறிவைத்து செயல்படும் இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிறுமிகளை ஏமாற்ற ஒரு புதிய யுக்தியை பயன்படுத்தியுள்ளனர்.

குறிப்பிட்ட சிறுமிகளிடம் தங்களை அவர்களுடைய சம வயது சிறுவர்கள் போல் காட்டிக் கொண்டு அவர்களுடன் பழகுவார்கள். பின்னர், பிற சிறுமிகள் பாலுறவு செயல்களில் ஈடுபடும் வீடியோக்களை மெதுவாக அவர்களுக்கு அனுப்புவார்கள்.

அந்த சிறுமிகள் கேமரா முன் அப்படி செய்யும் போது நாமும் அப்படி செய்யலாமே என்னும் எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படுத்துவற்காக இந்த யுக்தி பயன்படுத்தப் பட்டது.

அச்சிறுமிகளுக்கு தங்களுக்கு பின்னால் இருந்து அழுத்தம் கொடுப்பது பெரியவர்கள் என்பது தெரியாது. தங்களைப் போன்ற சிறுவர்களும் சிறுமிகளும் என்றே அவர்கள் நினைப்பார்கள். அப்படி நம்பி அவர்கள் கேமரா முன் செய்யும் பாலியல் தொடர்பான் விஷயங்கள் பதிவு செய்யப்பட்டு பின்னர் தேவைப் படுவோருக்கு விற்கப்படும்.

இம்முறை கனடா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 91 சிறுமியர், இந்த கயவர் கூட்டத்தின் வலையில் விழுந்துள்ளனர். இந்தக் குற்றம் தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களில் சிலருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 10,000 முதல் 98,715 டாலர் வரை பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு இழப்பீடு வழங்க சில குற்றவாளிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker