Latestஉலகம்

தூக்கக் கலக்கம்; புத்தகப் பை என்றெண்ணி நாற்காலியை மாட்டிக் கொண்ட மாணவன்- (video)

பிலிப்பைன்ஸ்,செப்.1- தூக்கக் கலக்கத்தில் புத்தகப் பைக்கு பதிலாக நாற்காலியை எடுத்து முதுகில் மாட்டிக் கொண்ட மாணவனின் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வரும் வேளையில், அக்காணொளியை குடும்பத்தார் நண்பர்களோடு பார்த்து வயிறு குலுங்கச் சிரித்து வருகிறார்கள்.

இச்சம்பவம் எங்கு நடந்தது என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால், ஆரம்பப் பள்ளி ஒன்றில் நடந்ததாக நம்பப்படுகிறது.

பள்ளி முடிந்து எல்லா மாணவர்களும் புறப்பட்டுக் கொண்டிருக்கையில், ஒரு மாணவன் மட்டும் மேசையில் தலை வைத்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.

அப்போது அங்கு வந்த ஒரு பெண்மணி மேசை மீதிருந்த அவனது நூல்களையும் மற்ற பள்ளி உபகரணப் பொருட்களையும் புத்தகப் பையில் வைத்துக் கொண்டிருந்தார்.

திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்த மாணவன் தனது புத்தகப் பை என்றெண்ணி வேக வேகமாக அங்கிருந்த நாற்காலியை முதுகில் மாட்டிக் கொண்டு நடந்தான்.

அதைப் பார்த்த வகுப்பாசிரியர் அந்த நகைச்சுவையான காட்சியை அக்காட்சியை தனது கைப்பேசியில் பதிவு செய்திருக்கிறார். அக்காட்சி பள்ளியின் சிசிடிவியிலும் பதிவாகியிருக்கிறது.

இதுவரை அக்காணொளியை 60 லட்சம் பேர் கண்டுக் களித்துள்ளனர்; 85 ஆயிரம் அக்காணொளியை ‘லைக்’ செய்துள்ளனர். ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் அக்காணொளியை தங்களின் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker