Latestமலேசியா

பூமிபுத்ராக்கள்: வெற்றிக்கு குறுக்கு வழியில்லை – துன் மகாதீர்

கோலாலம்பூர், செப்.1-பூமிபுத்ராக்களுக்கு சங்கடத்தை உருவாக்க அரசாங்கம் விரும்பவில்லை. எனினும் அந்த சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக நியாயமான, சமத்துவமான ஒரு தீர்வை சரியான இடத்தில் வைக்கவேண்டும் என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்திக் கொள்ளவே விரும்புகிறது என்று பிரதமர் துன் மகாதீர் சொன்னார்.

கடந்த காலங்களில் புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் பூமிபுத்ராக்களுக்கு பல வர்த்தக வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. இவர்களில் பலர் தங்களுடைய குத்தகைகளையும் அங்கீகரிக்கப்பட்ட பர்மிட்டுகளையும் இலாபத்திற்கு விற்றுவிட்டனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நாம் குறுக்கு வழியில் எதையும் அடைய முனைந்தால், முடிவில் வெற்றி பெறவேமுடியாது என்று 2018ஆம் ஆண்டுக்கான பூமிபுத்ரா மற்றும் தேசிய காங்கிரஸின் கூட்டத்தில் பேசிய போது துன் மகாதீர் இதனைக் குறிப்பிட்டார்.

இத்தகை குறுக்குவழி முறை பூமிபுத்ராக்களுக்கு உதவில்லை. அப்படிக் கிடைத்த பணத்தை முறையாக முதலீடு செய்யாமல் உள்ளதையெல்லாம் செலவழித்து விட்ட அவர்கள் தொடர்ந்து ஒன்றுமில்லாதவர்களாக உள்ளனர் என்று அவர் சொன்னார்.

இவர்களிடமிருந்து குத்தகைகளையும் பர்மிட்டுகளையும் வாங்கியவர்கள் தொடர்ந்து வெற்றிகரமாக திகழ்கின்றனர். இந்நிலையில் அத்தகைய குத்தகைகளையும் பர்மிட்டுகளையும் மூன்றாம் தரப்புகளுக்கு விற்றால் அதனை அரசாங்கம் ரத்து செய்யவிருக்கிறது என்று துன் மகாதீர் சொன்னார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker