Latestமலேசியா

மலாயாப் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் இளங்கலைக் கல்வி நீக்கம்

கோலாலம்பூர்,செப்.1- மலேசியாவில் அங்கீகாரம் பெற்ற மருந்தியல் துறையின் இளங்கலைப் பட்டக்கல்வியைத் தரும் பல்கலைக்கழகப் பட்டியலில் இருந்து மலாயாப் பல்கலைக்கழகம் நீக்கப்படவுள்ளது.

மலேசிய மருந்தியல் வாரியத்தின் பரிந்துரையின்படி MQA எனப்படும் மலேசிய தகுதிச் சான்றிதல் நிறுவனம் இம்முடிவை எடுத்ததாக மலாயாப் பல்கலைக்கழக மருத்துவக் கல்வித் துறையின் தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் அடீபா கமாரூல்ஸாமான் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த அங்கீகாரத்தை பெறத் தவறியதன் காரணம் நிர்வாக அடிப்படையிலான காரணமே தவிர கல்வித் தரமல்ல என அடீபா கூறினார்.

மருந்தியல் துறை சுயேட்சையாக இயங்குமாயின் அதற்கு அத்துறையின் இளங்கலைப் பட்டக்கல்வியை வழங்கும் தகுதி உள்ளது. அப்பட்டக்கல்வி மருத்துவத் துறையின் கீழ் இயங்க முடியாதென நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடியில் 21 பணியாளர்களைக் கொண்ட தனித் தனியாக இவ்விரு துறைகளை அமைப்பது பொருளாதார ரீதியாக விவேகமற்றதாக கருதப்படுகிறது.

இதனிடையே, இப்போது அப்பல்கலைக்கழகத்தில் மருத்தியல் துறையில் பயிலும் மாணவர்களுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என நினைவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker