Latestசினிமா

‘மாஸ்’ விமானி விகாஸை மணந்தார் நடிகை சுவாதி!

ஐதராபாத், செப்.2- நடிகை சுவாதியின் திருமணம் 30ஆம் தேதி ஐதராபாத்தில் நடந்தது. மலேசியன் ஏர்லைன்ஸ் விமானியான விகாஸ் என்பவரை கரம் பிடித்தார். கொச்சியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த சுவாதி, தமிழில் ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் “கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்- என்னை கட்டி இழுத்தாய்” என்ற பாடலில் அவர் விழிகளால் காதல் பேசி நடித்து இருந்த காட்சிகள் பெரிதும் பேசப்பட்டன.

அதற்குப் பின் ‘கனிமொழி’, ‘போராளி’, ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘வடகறி’. ‘யாக்கை’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் மலையாளத்திலும் முன்னணி கதாநாயகியாக நடித்தார். அவர் ஐதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சுவாதிக்கு இவ்வருடம் கைவசம் படங்கள் இல்லை. புதுமுக வரவால் அவருக்கு வாய்ப்பில்லாமல் போனது. இதனால் சுவாதிக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் விரும்பினர்.

இந்நிலையில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவருக்கும் சுவாதிக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் 30ஆம் தேதி ஐதராபாத்தில் நடந்தது. திருமண வரவேற்பு இன்று கொச்சியில் நடக்கிறது.

விகாஸ் இந்தோனேசியா, ஜகார்த்தாவில் வசிக்கிறார். திருமணத்துக்கு பின் சுவாதி கணவருடன் ஜக்கார்த்தாவில் குடியேறுவார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker