Latestவிளையாட்டு

ஹாக்கி: ஏமாந்தது மலேசியா! வெற்றியை தட்டிப் பறித்தது ஜப்பான்!

ஜக்கர்த்தா, செப். ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கத்தை வெல்வதன் வழி 2020 ஆம் ஆண்டில் தோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டிக்கு தேர்வு பெறும் மலேசியாவின் கனவு தகர்ந்து போனது.

இங்கு நடைபெற்ற இறுதியாட்டத்தில் ஜப்பானிடம் 3-1 என்ற பெனால்டிக் கோல்களில் மலேசிய வீழ்ச்சி கண்டு வெள்ளிப் பதக்கத்தையே பெற முடிந்தது ஆசிய விளையாட்டு வரலாற்றிலேயே முதன் முறையாக ஜப்பான் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்திருக்கிறது.

மிக எளிதாக பெறவேண்டிய வெற்றியை மலேசியா ஏமாந்து கைநழுவிட்டதானது, மலேசிய ஹாக்கி ரசிகர்களை கடும் விரக்திக்கு உள்ளாக்கியது. நேற்றைய ஆட்டத்தின் முற்பகுதியில் மலேசியா 4-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

மேலும் பிற்பகுதியில் மேலும் ஒரு கோலை போட்டு 5-2 என்ற நிலையில் முன்னேறி, தங்கப் பதக்கம் மலேசியாவுக்குத்தான் என்ற என்ற திடமான நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் கடைசி பத்து நிமிட இடைவெளியில் ஜப்பான் தொடர்ச்சியாக 3 கோல்களை அடித்து 5-5 இல் ஆட்டத்தை சமன் படுத்தியது.

எனினும், கடைசி 3 நிமிடங்கள் இருக்கும் போது மேலும் ஒரு கோலைப் போட்டு 6-5 என்ற கோல் கணக்கில் மலேசியா மீண்டும் முன்னிலை வகித்தது. ஆனால், அந்த வெற்றியை தற்காத்துக் கொள்ள முடியாமல் கடைசி 30 வினாடிகளே இருந்த நிலையில் ஜப்பானிடம் மேலும் ஒரு கோலை வாங்கிக் கட்டியதால் மலேசியா 6-6 என சமநிலை காண நேர்ந்தது.

அதன் பின்னர் பெனால்டி வழி முறையில் ஜப்பான் 3-1 -இல் வென்று தங்கப் பதக்கத்தை மலேசியாவிடமிருந்து தட்டிப் பறித்தது. இந்த ஆட்டத்தில் மலேசியா தங்கம் வென்றிருந்தால் ஒலிம்பிக் போட்டிக்கு அது நேரடியாக தேர்வு பெற்றிருக்க முடியும்.

ஆனால் அந்த வாய்ப்பை இப்போது இழந்து விட்ட மலேசியா, அடுத்து தேர்வுப் போட்டிகளில் வென்றால் மட்டுமே ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறமுடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker