Latestஇந்தியாஉலகம்

உலகிலேயே மிகப் பெரிய சிலைகள் இந்தியாவிலா?

புது டெல்லி, செப்.3-உலகில் அதிக அளவில் மிகவும் ஏழ்மையில் இருக்கும் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் அடங்கும். ஆனால், அந்த நாட்டில்தான் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது நம் நாட்டு பணத்துக்கு 4.12 பில்லியன் ரிங்கிட் செலவில் உலகிலேயே பெரிய சிலைகள் இரண்டு எழுப்பப்பட்டு வருகின்றன தெரியுமா?

குஜராத் அரசு எழுப்பி வரும் `இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை 182 மீட்டர் உயரம் கொண்டது. இதன் கட்டுமானப் பணிகள் இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டி முடித்ததும் இதுதான் உலகின் மிகப் பெரிய சிலையாக இருக்கும் எனக் கூறப்பட்டது. எனினும், சர்தார் வல்லபாயின் சிலையை விட, 30 மீட்டர் அதிகமாக, 212 மீட்டர் உயரத்தில் வீர சிவாஜி சிலை அமையும் எனத் தெரிகிறது.

வல்லபாய் பட்டேல், இந்தியாவின் முதல் துணைப் பிரதமரும், முதல் உள்துறை அமைச்சரும் ஆவார். விடுதலைப் போராட்டத்துக்கு வேராக இருந்து பல ஆண்டுகள் சிறைச்சாலையில் படாத பாடுபட்டவர். இந்தியாவிலுள்ள மாநிலங்களையெல்லாம் ஒருங்கிணைத்து நவ இந்தியாவை உருவாக்கிய சிற்பி வல்லபாய் பட்டேல். இந்தியாவின் முதல் பிரதமராக உண்மையில் இவர்தான் வந்திருக்க வேண்டும் எனவும் பலரால் போற்றப்படுவர் வல்லபாய் பட்டேல்.

அதே போன்று, மாமன்னர் வீர சிவாஜி மக்களை உண்மையாக நேசித்தவர். தனது ஆட்சி காலத்தில் மக்களை பாதுகாக்க துயர் துடைக்க எத்தகைய வீரச் செயலையும் செய்யத் துணிந்தவர்.

குஜராத்தில் வறுமையில் மக்கள் வாடும் வேளையில், மும்பையில் கடலுக்குள் சிலையைக் கட்டினால் மீன்வளம் குறையும் என்று எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், வல்லபாய் பட்டேலும் மன்னர் சிவாஜியும் உயிரோடு இருந்திருந்தால் தங்களுக்கு சிலைகள் கட்டுவதற்கு சம்மதித்திருப்பார்களா? இந்நிலையில், இந்த சிலைகள் கட்டப்படுவதற்கு பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கிறது என பலரும் விமர்சித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker