Latestசினிமா

தூக்கில் தொங்கிய பிரபல மாடல் அழகி

லாகூர், செப்.3- பாகிஸ்தானை சேர்ந்த பிரபல மாடல் அழகி ஒருவர், வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். பாகிஸ்தான் மாடல் அழகி அனாம் தனோலி (வயது 26) லாகூரில் உள்ள தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசார் அனாம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அனாமின் கணவர் நவீட் அமாட் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே அனாம் மன அழுத்தத்தில் காணப்பட்டார். அன்றைய தினம் பரிசோதனைக்கு செல்வதற்காக நான் என்னுடைய மனைவியை மருத்துவமனைக்கு கிளம்புமாறு அழைத்தேன்.

அப்பொழுது திடீரென அறைக்குள் சென்ற அனாம், அவருடைய துப்பட்டாவை மின்விசிறியில் மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்துள்ளார்.

அதே சமயம் போலீஸ் தரப்பு கூறுகையில், இந்தச் சம்பவம் குறித்து தற்கொலையா, அல்லது கொலையா? என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என கூறியுள்ளனர்.  அனாம் – நவீட் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker