Latestமலேசியா

தே.மு. அரசின் கடன்களை அடைக்க, சொத்துக்களை விற்க நேரும் -பிரதமர்!

கோலாலம்பூர், செப்.3- முன்னாள் தேசிய முன்னணி அரசாங்கத்தினால் ஏற்பட்ட கடன்களை ஈடுகட்டுவதற்காக சில அரசாங்கச் சொத்துக்களை விற்க வேண்டிய நிலை பக்காத்தான் அரசுக்கு ஏற்படலாம் என்று பிரதமர் துன் மகாதீர் சொன்னார்.

முன்னாள் அரசாங்கத்தினால், மேற்கொள்ளப்பட்ட திட்டங்களுக்காக அந்த அரசு எடுத்திருந்த கடன்களை ஈடுகட்டக்கூடிய அளவுக்கு அந்தத் திட்டங்களிலிருந்து போதுமான இலாபம் கிட்டவில்லை என்று புருணைப் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் துன் மகாதீர் குறிப்பிட்டார்.

ஆகையால் நாம் இப்போது முதலில் கவனம் செலுத்த வேண்டியது நம்முடைய கடன்கள் விஷயத்தில் தான். ஒருவர் தன்னுடைய கடன்களுக்கான வட்டியைச் செலுத்தாவிட்டால், அவர் திவாலாகி விட்டதாக அறிவிக்கப்பட நேரும் என்று அவர் சொன்னார்.

நாம் இப்போது வட்டியைக் கட்டுவதற்கான பணத்தைத் தேடவேண்டும். பின்னர் அசல் கடனை அடைக்க வேண்டும். இது மிகக் கடுமையானது. இந்தக் கடனை அடைக்க நாம் சொத்துக்களை விற்றுத்தான் பணம் பெறவேண்டியிருக்கலாம் என்று துன் மகாதீர் கூறினார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker