Latestமலேசியா

‘பாக் லா’ நலமுடன் இருக்கிறார்; இணையத்தில் பரவிய படம் பழையது

ஜோர்ஜ் டவுன்,செப்.3- உடல் நலம் இல்லாதது போல சக்கர நாற்காலியில் முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவி அமர்ந்திருக்கும் படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆனதை அடுத்து, அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பலரும் அந்த படத்துடன் தங்களின் சமூகப் பக்கங்களில் பதிவு செய்திருந்தனர். ஆனால், அப்துல்லாவின் உடல் நலம் தேறி வருவதாகவும் அந்த படத்தில் இருப்பது போல் எல்லாம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அப்துல்லாவின் உடல் நலம் குன்றி இருந்தது உண்மைதான். எனினும், இப்போது அவர் நலமுடன் இருப்பதாக அவரது அலுவலகத் தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், அப்துல்லாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறைக் காண்பித்த அனைவருக்கும் அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, பொறுப்பற்ற தரப்பினர் இவ்வாறு வதந்திகளைப் பரப்புவது சரியல்ல என பெர்த்தாம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஷாரிபூல் அஸார் ஒத்மார் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் அப்துல்லாவைச் சந்தித்ததாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker