Latestமலேசியா

‘லெஸ்பியன்’களுக்கு பொதுவில் பிரம்படி கொடுத்திருக்கக் கூடாது- கைரி

கோலாலம்பூர்,செப்.3- ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதற்காக இரு பெண்களுக்கு பொதுவில் வழங்கப்பட்ட பிரம்படி தண்டனைக்கு ரெம்பாவ் நாடாளுமன்ற உறூப்பினர் கைரி ஜமாலுடின் கண்டனம் தெரிவித்துள்ளார். இவ்வாறான பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல்வேறு வழிவகைகள் உள்ளன. அதை விடுத்து, இப்படி அனைவரது முன்னிலையில் பிரம்படி கொடுப்பது சரியல்ல என அவர் கருத்துரைத்துள்ளார்.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு பிரம்படி விதிப்பது ஷரியா சட்டத்தில் உள்ளதுதான். அதற்கென்று பொதுவில் அத்தண்டனையை நிறைவேற்றுவது மனிதமற்ற ஒரு செயல் என அவர் கூறியுள்ளார்.

இத்தகைய தகாத உறவில் ஈடுபடுவர்களுக்கு பிரம்படி கொடுக்க வேண்டும் என கூறியுள்ள இஸ்லாம்தான் ஒவ்வொரு மனிதரின் மானத்தையும் காக்க வேண்டும் எனவும் கற்றுக் கொடுத்துள்ளதாக கைரி சுட்டிக் காட்டியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி, பிற்பகல் 1.50 மணிக்கு இரு பெண்கள் டுங்குன், அரேனா ஸ்குவேர் சதுக்கத்தில் காரில் ஓரின தகாத உறவில் ஈடுபட்ட குற்றத்திற்காக 100 பேருக்கும் மேற்பட்டோர் முன்னிலையில் அவ்விருவருக்கும் ஆளுக்கு 6 பிரம்படிகள் கொடுக்கப்பட்டன. இவ்வாறான தண்டனை நிறைவேற்றப்படுவது நாட்டில் இது முதல் முறையாகும்.

அவர்களை காயப்படுத்துவதற்காக இத்தண்டனை வழங்கப்படவில்லை. மாறாக, அவர்களுக்கு படிப்பினையாக இத்தண்டனை அமையும் என்பதற்காகவே இத்தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிபதி கமால்ருவாஸ்மி இஸ்மாயில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்விரு பெண்களுக்கும் ஆளுக்கு 3,300 ரிங்கிட் அபதாரமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்தத் தவறினால் நான்கு மாத சிறை விதிக்கப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker