Latestமலேசியா

முதல் சீக்கிய அமைச்சர்: மலேசிய சாதனை புத்தகத்தில் கோபிந்த் சிங்

புத்ராஜெயா,செப்.4- மலேசிய வரலாற்றில் முதல் சீக்கிய அமைச்சராக பதவியேற்ற கோபிந்த் சிங் டியோ மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். அதற்கான சான்றிதழ் இன்று அவருக்கு வழங்கப்பட்டது.

அதையடுத்து, பேஸ்புக்கில் அவர் மலேசிய சாதனை புத்தகத்தின் சான்றிதழைப் பெற்றுக் கொண்ட படத்தை பலரும் பகிர்ந்து அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

14-ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, பூச்சோன் நாடாளுமன்ற உறுப்பினரான கோபிந்த் சிங் தொடர்பு பல்லூடக அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

45 வயது கோபிந்த் சிங், ‘ஜெலூத்தோங் சிங்கம்’ என்ற அழைக்கப்படும் மறைந்த மூத்த அரசியல்வாதி கர்ப்பால் சிங்கின் புதல்வர் ஆவார். ஆசியாவில் இந்தியாவுக்கு அடுத்த மலேசியாவில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker